Saturday, June 25, 2011

"தமிழச்சி"யில் என் பதில்கள் 02


Prakash Raj=============>>>>>>>>>>>>>>>


                  / /இஸ்லாத்தைப் பற்றி ஆராய்ந்தால் அன்புக்கு எவளவு முன்னுரிமை இருக்கின்றதோ அதற்கு மேல் வன்மை செயலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. அன்பு தான் முக்கியம் என்றால் எதற்காக இஸ்லாத்தை சார்ந்த நாட்டில் தீவிரவாதம் அதுவும் அல்லா வின் பெயரினால் ? பெண் அடிமைத்தனம் இன்னும் முஸ்லிம் நாட்டில் தான் அதிகமாக காணபடுகிறது. கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் தோழர்களே ... இந்திய வில் இப்பொது அநநிலை மாறிவிட்டது . பெண்கள் அணைத்து துறைகளிலும் அவர்களின் வளர்ச்சி அதிகமாகவே தெரிகிறது.//


                 // பெண்கள் அடிமைத்தனம் இபோதும் உள்ளது என்றால் எந்த விதத்தில். இன்னும் என்ன சுதந்திரம் எதிர்பார்கிறார்கள்?//






நான்======================>>>>>>>>>>>>>




உங்கள் நியாயமான கேள்விக்கு நன்றி @Prakash Raj.
இஸ்லாம் உண்மையில் தீவிரவாதத்துக்கு இடமளிக்கவே இல்லை. எல்லா விடயங்களிலும் மென்மையையே போதிக்கிறது. மென்மை பலன் தராது போகும் கடைசி கட்டத்தில் தான் போர் புரிய அனுமதி இருக்கிறது. எவ்வாறு புது டில்லியின் மீது பாக்கிஸ்தான் அணு குண்டு வீசிவிட்டால், அதன் பின் பாக்கிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமற்றதோ, எவ்வாறு இந்தியாவும் யுத்தத்தில் இறங்குவது தான் சரியோ, அது போன்ற இக்கட்டான நிலையில் தான் போருக்கு அனுமதி உண்டு.



<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>



‎//அன்பு தான் முக்கியம் என்றால் எதற்காக இஸ்லாத்தை சார்ந்த நாட்டில் தீவிரவாதம் அதுவும் அல்லா வின் பெயரினால் ? //

அல்லாவின் பெயரில் மனிதர்கள் தப்பு செய்கிறார்கள் என்றால், அந்த தப்புக்கு அல்லாஹ் தான் பொறுப்பா?

உதாரணத்துக்கு Prakash Rajஇன் பெயரில் நாளைக்கே நான் நடுத்தெருவில் ஒரு கொலை செய்கிறேன் என வைத்துக் கொள்வோம்.

இப்போது குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டியது Prakash Rajஆ? அல்லது நானா?





<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>




அல்லாவின் பெயரால் அநேகமான கொடூரங்கள் நடக்கின்றன. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஏன் இந்தியாவில் கூட ஆயிரக்கணக்கான அப்பாவிகள் இது வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள்.ஆனால் அவற்றுக்கும் அல்லாவுக்கோ இஸ்லாத்துக்கோ சம்பந்தம் இல்லை.


<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


‎"ஒருத்தனுக்கு ஒருத்தி" என்று கோஷமிடும் இந்தியா தான் எயிட்ஸ் நோயாளிகள் எண்ணிக்கையிலும் முன்னணி நாடுகளில் ஒன்றாக இருக்கிறது என்றால், அந்த கொள்கையை இந்தியர்கள் சரிவர பின்பற்றவில்லை என்று தானே அர்த்தம்?

அதே போன்று இஸ்லாமிய நாடுகளில் தீவிரவாதம் இருக்கிறது என்றால், அங்குள்ள மக்கள் இஸ்லாத்தை சரியாக பின்பற்றவில்லை என்றல்லவா அர்த்தம்?



<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


ஆனால் தீவிரவாதம் என்று நீங்கள் எதை கருதுகிறீர்கள்? அப்பாவி மக்களுக்கு எதிராக நடந்தால் தான் அது தீவிரவாதம். உரிமைக்காக நடந்தால்?

பெற்றோலிய வளத்தை சுரண்டுவதற்கும் , உலகில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டவும் அமெரிக்காவும் ,நேடோ படைகளும், தமது சொந்த நாட்டுக்குள் படையெடுப்பதை எதிர்ப்பவர்களுக்கு நீங்கள் தீவிரவாதிகள் என்பீர்களா அல்லது சுதந்திர போராட்ட வீரர்கள் என்பீர்களா?

கவலை தரும் விடயம் என்னவென்றால், நாடுகளை அபகரித்தது மட்டுமின்றி, அதை எதிர்ப்பவர்களுக்கும் "தீவிரவாதி" என பெயர் சூட்டி வைத்திருக்கிறது அமெரிக்க வல்லரசு!

ஞாபகம் இருக்கட்டும்: இந்திய மக்களின் "தேசபிதா","சுதந்திர போராட்ட வீரர்" என்றெல்லாம் அழைக்கப்படும் மகாத்மா காந்தி கூட அன்று வெள்ளைக்காரர்களால் "தீவிரவாதி" என்று தான் அழைக்கப்பட்டார்!



<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>



‎//இந்திய வில் இப்பொது அநநிலை மாறிவிட்டது . பெண்கள் அணைத்து துறைகளிலும் அவர்களின் வளர்ச்சி அதிகமாகவே தெரிகிறது.//

ஆனால் இன்னும் வரதட்சணை கொடுமை, மாமியார் கொடுமை, கணவன் கொடுமையால் தீக்குளிப்பவர்கள் இருக்கத் தானே செய்கிறார்கள்?

// பெண்கள் அடிமைத்தனம் இபோதும் உள்ளது என்றால் எந்த விதத்தில். இன்னும் என்ன சுதந்திரம் எதிர்பார்கிறார்கள்?//

இன்று உலகில் பொதுவாக எல்லா நாடுகளிலும் ஆண்களை விட பெண்களின் சனத்தொகை சதவீதம் அதிகரித்துள்ளது. எல்லா நாடுகளிலும் பெண்களின் சனத்தொகை 50+%.

ஆனால் இந்தியாவில் மட்டும் அத்தகைய ஒரு வளர்ச்சியைக் காண முடியவில்லை ஏன்? ( ஆண்/பெண் விகிதாசாரம்= 1.1/1.0 wikipedia )

என்ன காரணம் தெரியுமா? முன்பெல்லாம் பெண்பிள்ளைகளை கள்ளிப் பால் கொடுத்து கொன்றீர்கள். இப்போது பிறக்கும் முன்பே ஸ்கேன் செய்து பார்த்து விட்டு , பெண் குழந்தை என்று தெரிந்தால் கர்ப்பைக்குள்ளேயே கருவறுத்துவிடுகிரீர்கள்!(அபார்ஷன்).

// பெண்கள் அடிமைத்தனம் இபோதும் உள்ளது என்றால் எந்த விதத்தில். இன்னும் என்ன சுதந்திரம் எதிர்பார்கிறார்கள்?//

பெண்களுக்கு பிறப்பதற்கு கூட சுதந்திரம் கொடுக்kaaத போது , அதை விட என்ன பெரிய பெண் அடிமைத்தனம் இருக்காப்போகிறது பாஸ்?





<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>



முத்துக் குமார் ==================>>>>>>>>>>



‎@ Mohamed Rimaz:
//அதே போன்று இஸ்லாமிய நாடுகளில் தீவிரவாதம் இருக்கிறது என்றால், அங்குள்ள மக்கள் இஸ்லாத்தை சரியாக பின்பற்றவில்லை என்றல்லவா அர்த்தம்?//

சரியாகப் பின்பற்றுவது இருக்கட்டும்....

இஸ்லாம் மதத்தையே ஒழித்துவிட்டால் தீவிரவாதமும் ஒழிந்துவிடும், நீயோ நானோ இதைப் பற்றி பேசவேண்டியதும் இல்லை.
நீ நல்ல பிள்ளைல ஆமாம் சொல்லு ஆமாம் சொல்லு...





<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>





நான்============================>>>>>>>>>>>

‎//நீ நல்ல பிள்ளைல ஆமாம் சொல்லு ஆமாம் சொல்லு...//
@முத்துக் குமார் எப்படி ஆமாம் பிள்ளையாக வளர்க்கப் பட்டிருக்கிறார் என்பதற்கு இதுவே போதுமான சான்று.

//இஸ்லாம் மதத்தையே ஒழித்துவிட்டால் தீவிரவாதமும் ஒழிந்துவிடும், நீயோ நானோ இதைப் பற்றி பேசவேண்டியதும் இல்லை.
நீ நல்ல பிள்ளைல ஆமாம் சொல்லு ஆமாம் சொல்லு...//

தனது பிற்போக்குவாதத்திற்காக ஒரு மதத்தையே அழிக்க நினைக்கும் முத்துக் குமார் போன்ற தீவிரவாதிகள் இருக்கும் வரையும், தீவிரவாதம் அழியாது!

அது வரையும் நீயும் நானும் அதை பற்றி பேச வேண்டியிருக்கும் முத்துக் குமார்!



<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

Fathima Samla 
‎====================>>>>>>>>>>>>>>





///இஸ்லாம் மதத்தையே ஒழித்துவிட்டால் தீவிரவாதமும் ஒழிந்துவிடும்,///

உலகில் தீவீர வாதம் செய்வது இஸ்லாமியர்கள் மட்டும் இல்லையே?

அது எப்படி விடுதலை புலிகள் சண்டை இட்டது புனிதப் போர் அதை அடுத்தவன் செய்தால் அது தீவீரவாதம்.

நீங்கள் எல்லாம் நியாயம் பேச வந்து விட்டீர்கள்.




<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


Abdullah Jamal ‎===============>>>>>>>>>>>>>>>>>


@முத்துக்குமார், ஒருத்தனுக்கு டாக்டர் நோய்க்கு மருந்து எழுதிக்கொடுக்குறார், அதை அவன் சரியான அளவில் மருந்தை உட்கொள்ளாமல் ஏறுக்கு மாறாக சாப்பிட்டு செத்துப்போயிட்டான், இப்ப பண்ணலாம்னு முத்துக்குமார் மாதிரி ஆளுங்ககிட்ட போய் கேட்டா, எல்லா டாக்டர்களையும் புடிச்சு கொள்ளுங்க அப்படின்னு தீர்ப்பு சொல்லுவார் போல..!!




‎//தெளிவான புரிதலோடு ஏற்கனவே விவாதித்து விட்டோம். இதற்கு மேல் உங்களுக்கு சார்பாக தான் பேசியாக வேண்டும் என்று நினைத்தால் அந்த லாஜிக்கை என்னிடம் எதிர்பார்க்காதீர்கள்.// இந்த விவாதம் எங்கே நடந்தது லிங்கை தரவும்


‎6476. அபூ ஷ{ரைஹ் அல்அதவீ அல்குஸாஈ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ''அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்' என்றார்கள்.
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


Thenee Kadir என்னங்க ஜெமில் பாய்... நாம் பன்பாடு அறியாதவர்கள் அல்ல. சில கருத்துக்கள் மனதை மிகவும் வேதனையடை6 செய்கிறது. அதனை எப்படி கையால்வது என்பது நாம் அறியாததுமல்ல. இவர்களிடம் ஆதாரம் கான்பித்தால்... அறிவுத்தனமான பதிலா வருகிறது... மனிதம் பேசும் இவர்கள் மனதை நோகடிக்கிறார்கள்.


<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


‎நான்======================>>>>>>>>>>>>>>>>>>>>
@Thenee Kadir: நீங்கள் சொல்வது புரியவில்லை.
யாரு ஜெமில்?
எந்த கருத்து புண்படுத்தியது?
"இவர்கள்" என்று நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள்?
தயவு செய்து விளக்கம் தரவும்.

நன்றி அன்புடன்




<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நான்===============>>>>>>>>>>>>>>>>>>>>>>>


 ‎@Abdullah Jamal //இந்த விவாதம் எங்கே நடந்தது லிங்கை தரவும்//

அவர்கள் கூறும் விவாதம் இதுவாக தான் இருக்க வேண்டும். அந்த இலட்சணத்தை நீங்களே பாருங்கள்.
http://www.facebook.com/note.php?note_id=227541713926458&comments

அவர்கள் "தெளிவாக" விவாதித்து விட்டார்களாம்!



<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


Thenee Kadir மண்ணிக்கவும்
எழுத்தில் தவறு நேர்ந்து விட்டது ஜமால் அவர்களைத்தான். உதாரணத்திற்கு முத்துக்குமார் கூற்றைப் பாருங்கள்... அவர் சொல்வது இஸ்லாத்தை அழிப்பெதென்றால்...

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>



Babalji Manickam fathima samla// விடுதலை புலிகள் போராட்டம் இன அடிபடையிலானது,மதம் சார்ந்தது அல்ல,உங்கள் மூக்கை அதில் நுலைக்கவேண்டாம்!!!
‎//fathima samla// ஜீகாத் (புனிதப்போர்) என்ற பெயரில் காஃபிர் (இஸ்லாம் அல்லாதவர்கள்) கொல்லவேண்டும் என்பது தீவிரவாதம் என்று சொல்லாமல் வேறு என்னெண்பது???


//fathima samla// உங்களுக்கு உதாரணம் சொல்ல வேறு யாரும் கிடைக்கவில்லையா,மததின் பெயரால் இனத்தை அடமானம் வைகாதீர்கள்...


<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>



Mohamed Rimaz (நான் )==================>>>>>>>>>>>>>
 

‎@Babalji Manickam
//விடுதலை புலிகள் போராட்டம் இன அடிபடையிலானது,மதம் சார்ந்தது அல்ல,உங்கள் மூக்கை அதில் நுலைக்கவேண்டாம்!//

ஹா ஹா ஹா
மதத்தின் பெயரால் அப்பாவி மக்களை கொன்றால் அது கொலை, இனத்தின் பெயரால் கொன்றால் அது பரவாயில்லை என்கிறீர்களா?

உங்கள் கருத்து "குடிகாரன் பேச்சு" போல் அல்லவா இருக்கிறது?

//ஜீகாத் (புனிதப்போர்) என்ற பெயரில் காஃபிர் (இஸ்லாம் அல்லாதவர்கள்) கொல்லவேண்டும் என்பது தீவிரவாதம் என்று சொல்லாமல் வேறு என்னென்பது???//

ஜிஹாதின் பெயராலோ,
இனத்தின் பெயராலோ, எப்படி அப்பாவி மக்களை கொன்றாலும் அது தீவிரவாதம் தான் என்பதை எப்போது புரிந்து கொள்வீர்கள்?





<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>




Prakash Raj ‎@Mohamed Rimaz :"அல்லாவுக்கோ இஸ்லாத்துக்கோ சம்பந்தம் இல்லை." இதை தான் பெரியார் "உலகத்தை யோக்கியமாகவும், அயோக்கியர்களை அழித்து யோக்கியர்களை உண்டாக்கவும் செய்வதற்கு தனது சக்தியை உபயோகிக்காத ஒரு கடவுளிடத்தில் மனிதன் ஏன் நம்பிக்கை வைக்க வேண்டும்?" என்று கூறுகிறார் . இது பொது கறுத்து யாரையும் குர்ப்பிட்டு சொல்லவில்லை

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>



Mohamed Rimaz(நான்)=============>>>>>>>>>>>>>>>>>


 ‎@Prakash Raj
//உலகத்தை யோக்கியமாகவும், அயோக்கியர்களை அழித்து யோக்கியர்களை உண்டாக்கவும் செய்வதற்கு தனது சக்தியை உபயோகிக்காத ஒரு கடவுளிடத்தில் மனிதன் ஏன் நம்பிக்கை வைக்க வேண்டும்?"//

உலகத்தை யோக்கியமாகவும், மனிதர்களை யோக்கியர்கlaaகவும் படைத்திருந்தால் உலகம் உயிரோற்றமற்றதாக இருந்திருக்கும். எல்லோரும் யோக்கியர்களாக இருப்பார்கள். ஆனால் யோக்கியத்துக்கு மரியாதை இருக்காது!

உலகில் கால் இல்லாதவர்களும் இருப்பதால் தானே எமது கால்களின் அருமையை அறிகிறோம்? பசி என்று ஒன்று இருப்பதால் தானே உணவின் அருமையை அறிந்திருக்கிறோம்? இருக்கும் ஒரு பொருளின் அருமையை அறிய அது இல்லாத ஒரு சந்தர்ப்பமும் இருக்க தானே வேண்டும்?

உலகில் எல்லாரும் மருத்துவர்களாய் இருக்கும் ஒரு நிலையை நினைத்துப் பாருங்கள்! எல்லாருக்கும் வைத்தியம் தெரியும். ஆனால் ஒரு வைத்தியருக்கும் வேலைஇருக்காது!

உலகில் எல்லோரிடமும் போதுமானளவு பணம் இருந்தால், பணத்துக்கு என்ற எந்த பெறுமதியும் இல்லாதிருந்திருக்கும். பணத்தால் ஒரு பொருளையும் வாங்க முடியாதிருந்திருக்கும். பணத் தேவை உள்ளவனும் உலகில் இருப்பதால் தான் அவனிடம் பணத்தைக் கொடுத்து, எமக்கு தேவையான பொருளை அவனிடமிருந்து வாங்க முடிகிறது.

இவ்வாறு எங்களுக்கு புரியாவிட்டாலும், உலகின் இயக்கத்துக்கு ஏற்றவாறு, எதை, எங்கு, எப்படி படைக்க வேண்டுமோ, அப்படி படைத்திருக்கிறான் இறைவன்.
ஏனென்றால் அவன் எங்கள் எல்லோரையும் விட மகா புத்திசாலி.


<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>