குர்-ஆன் இறங்கும் முன் (கி.பி 500களில்) அரேபியாவில் பெண்கள் மனித பிறவிகளாக அன்றி வெறும் போகப் பொருள்களாகவே கருதப்பட்டு வந்தார்கள்.அவர்களுக்கு என்று எந்த உரிமைகளும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
பெரும்பாலும் உலகம் எங்கும் அந்த சூழ்நிலை தான் இருந்தது. ஏன் இந்தியாவில் கூட கணவன் இறந்தால் மனைவியும் உடன்கட்டை ஏற்றப்படும் வழமை இருந்தது.(உடன்கட்டை வரலாற்றினைக் கொண்டவர்கள் இன்று "குர்-ஆன்=பெண்ணடிமைவாதம் " என்று பேசுவது எனக்கு கடும் நகைச்சுவையாக இருக்கிறது)
அத்தகைய ஒரு சூழலில் அவர்களுக்கு என்று பெண்ணுரிமையை அறிமுகம் செய்ததே குர்-ஆன் தான்.
குர்-ஆன் அது வரை காலமும் ஆண்களின் (ஆடு,மாடு,பயிர் நிலம் போன்ற) சொத்தாக மட்டுமே கருதப்பட்டு வந்த பெண்களுக்கு சொத்துரிமை வழங்க வேண்டும் என பேசியது-(4:7)
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இந்தியாவிலும் ,அங்கிருந்து பரவிய மற்ற நாடுகளிலும் வரதட்சிணை என்ற பெயரில் பெண்களை ஒடுக்கும், அவர்களின் மண ஆசையை -பிணமாக்கும்,முதிர் கன்னிகளின் கனவுகளை(2011ல் கூட) கண்ணீராக்கும், வரதட்சிணை பேர்வழிகள், குர்-ஆனின் பெண்ணியல் கருத்துக்களை பிழையாக விளங்கிக் கொண்டு, கூப்பாடு போடுவது எனக்கு புதுமையாக இருக்கிறது.
ஆனால் குர்-ஆனோ, வரதட்சனையை மறுப்பதுடன்,ஆண்கள் தான் பெண்களுக்கு பணம் (அல்லது சொத்து) "மஹராக" கொடுத்து மணம் முடிக்க வேண்டும் என்று கண்டிப்பாக (4:127ல்) கூறி,மண வாழ்க்கையில் பெண்களுக்கு (கி.பி.500கள்தொடக்கம்) ஒரு அந்தஸ்த்தைக் கொடுக்கிறது.
ஆனால் வரதட்சணை சமூகம் இன்று கூட பெண்களுக்கு மண வாழ்க்கை உரிமையை மறுத்து வருவதுடன், போலியாக பெண்ணுரிமை பற்றி பேச முற்படுகிறது.

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
@தமிழச்சி:
//பெண்கள் அன்னிய ஆடவர்கள் முன்னால்
குரலை உயர்த்தி பேசாதீர்கள் என்பது
நபிகளின் கட்டளை.//
இதனை பெண் ஒடுக்குமுறைக்கான ஆதாரமாக எப்படி கூறுவீர்கள்?
ஏனெனில்,பெண்களுக்கு மட்டுமல்ல,நபியவர்களின் முன்னிலையில் இருந்த ஆண்களுக்கு கூட குரலை உயர்த்த வேண்டாம் என குர்-ஆன் கூறுகிறது. ஏனெனில் அது அடக்கத்தையும் நளினமாக பேசுவதையுமே போதிக்கிறது. அதுவே மனித பண்பாடு ஆகும்.
மாறாக மிருகங்கள் போல காட்டு மிராண்டித்தனமாக கத்திக் கொண்டிருப்பது தான் சுதந்திரம் என்று நீங்கள் கருதினால், உங்கள் "சுதந்திரம்" பற்றிய வரைவிலக்கணத்தை நினைத்து சிரிக்க மட்டுமே என்னால் முடியும்.

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
@தமிழச்சி:
//எந்தப் பெண்ணாவது தனது கணவருக்காக அல்லாமல்
அந்நியருக்காக வாசனைத் திரவியங்களை
பூசிக் கொண்வாயேயானால் அது நிச்சயம் அறிவற்றதாகும்.
நரகத்தின் நெருப்பாகும். - நபிகள்//
தனது கணவனுக்காக அல்லாமல் பாதையில் செல்லும் எல்லா ஆடவனுக்காகவும்,சீவி, சிங்காரித்துக் கொண்டு , குலுக்கி மினுக்கிக் கொண்டு இருப்பவளை அழைப்பதற்கு தமிழில் ஓர் வார்த்தை இருக்கிறது.
"......................... ...விபச்சாரி.............. ........"
அது உங்களுக்கு நரகத்தின் நெருப்பாக அன்றி, சுவர்க்கத்தின் வாசலாக தெரிந்தால்,நீங்களும் உங்களை சார்ந்த பெண்களும் விபச்சாரிகளாய் இருப்பது தான் சுதந்திரம் என்று நினைத்துக் கொண்டால், அதற்கு குர்-ஆனும், இஸ்லாமும் பொறுப்பல்ல. நீங்கள் விரும்பியவாறு இருந்து கொள்ளுங்கள்.
//எந்தப் பெண்ணாவது தனது கணவருக்காக அல்லாமல்
அந்நியருக்காக வாசனைத் திரவியங்களை
பூசிக் கொண்வாயேயானால் அது நிச்சயம் அறிவற்றதாகும்.
நரகத்தின் நெருப்பாகும். - நபிகள்//
தனது கணவனுக்காக அல்லாமல் பாதையில் செல்லும் எல்லா ஆடவனுக்காகவும்,சீவி, சிங்காரித்துக் கொண்டு , குலுக்கி மினுக்கிக் கொண்டு இருப்பவளை அழைப்பதற்கு தமிழில் ஓர் வார்த்தை இருக்கிறது.
".........................
அது உங்களுக்கு நரகத்தின் நெருப்பாக அன்றி, சுவர்க்கத்தின் வாசலாக தெரிந்தால்,நீங்களும் உங்களை சார்ந்த பெண்களும் விபச்சாரிகளாய் இருப்பது தான் சுதந்திரம் என்று நினைத்துக் கொண்டால், அதற்கு குர்-ஆனும், இஸ்லாமும் பொறுப்பல்ல. நீங்கள் விரும்பியவாறு இருந்து கொள்ளுங்கள்.
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
@தமிழச்சி:
//பெண் மறைவாக இருக்க வேண்டியவள்.
அவள் வெளியே வருவதை எதிர்நோக்கிசைத்தான்
(அவள் வீட்டு வாசலில்) காத்துக் கொண்டிருக்கிறான்.
வீட்டில் இருப்பவளோ
இறைக் கருணையை நெருங்கியவளாக இருக்கிறாள்.
(திர்மீதி) என்று நபிகள் (ஸல) அவர்கள் கூறியிருக்கிறார்.//
இந்த நபிமொழியை என்னால் அடைய முடியவில்லை."திர்மிதி"இல் அதன் ஹதீஸ் எண்ணை குறிப்பிடுங்கள் பார்க்கலாம்- இன்ஷா அல்லாஹ்
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நீங்கள் இங்கே சுட்டிக் காட்டியிருக்கும் காணொளியை குறித்து தான் பேசுகிறீர்கள் என்பதை நான் அறிவேன்.
அனால் குறித்த ஒரு அமைப்பின் செயற்பாடுகளையும் கூறும் கதைகளையும் மட்டுமே கருத்திட் கொண்டு இஸ்லாம் மதத்தையே குறை கூறுவது தவறு என்று நான் கூறுகிறேன்.
ஒரு மதத்தையோ,கோட்பாட்டையோ பற்றி பேசும் போது, அந்த மதத்தின் அல்லது கோட்பாட்டின் உண்மையான கருத்துக்களை வைத்தே அதன் மீது கேள்வி எழுப்ப வேண்டும். மாறாக அதை பின்பற்றுபவர்களை வைத்து அந்த கோட்பாட்டினை எடை போட கூடாது.
ஏனென்றால் கோட்பாடுகளை ஒழுங்காக பின்பற்றாதவர்கள் எல்லா சமுதாயத்திலும் உண்டு. அதற்கு இஸ்லாமும் விதிவிலக்கு அல்ல.
இஸ்லாத்தை சரிவர பின்பற்றாத "முஸ்லிம்" பெயர் தாங்கிகளும் இருக்கிறார்கள் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.
அவ்வாறான ஒரு ஆள் செய்யும் தவறுக்கு இஸ்லாம் மீது விரல் நீட்டுவது எவ்வகையில் நியாயம்?
மாமிசம் உண்ணும், மது அருந்தும், விபச்சாரம் புரியும் இந்துக்கள் இருக்கிறார்கள் என்பதற்காக, இந்து மதமானது மாமிச போசணம், மது அருந்துதல்,விபச்சாரம் புரிதல் ஆகியவற்றை போதிக்கும் ஒரு மதம் என்பது சரியா?
ஒரு கமியூனிசவாதி திருடனாக இருக்கிறான் என்பதற்காக கம்யூனிசம் திருட்டை போதிக்கும் கொள்கை என்று கூறுவது முறையா?
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
பெண்கள் வீட்டை விட்டு வெளி வருவதை இஸ்லாம் தடுக்கவில்லை. நபியவர்களின் காலத்தில் போரில் முதலுதவி செய்வதில் கூட பெண்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஆக பெண்கள் வெளியில் வருவதை தடை செய்யாத இஸ்லாம், அவர்களின் பாதுகாப்புக்காக சில வரைமுறைகளை வைத்திருக்கிறது. [மாடர்ன் பெற்றோர்கள் கூட தான் பெண் பிள்ளைகள் இரவு நேரங்களில் தனியே பாதையில் நடமாடுவதை விரும்புவதில்லை அல்லவா? அது போல தான்]
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
பெண்கள் ஆர்பாட்டங்களில் ஈடுபடுவது தவறில்லை என்றாலும், ஆண்களையும் பெண்களையும் இரண்டற கலக்க வைத்து, அனாச்சாரங்கள் நடக்க இடமளிக்கும் வகையில் TNTJ நடந்திருப்பது தவறு. அது இஸ்லாத்துக்கு முரணானது.
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
மேலும் ஒரு நபிமொழியையோ குர்-ஆன் வசனத்தையோ, ஆய்வு செய்யும் போது, அவ்வசனத்தின் பின்னணி, அதன் உட்கருத்து போன்றவற்றையும் சேர்த்தே அணுக வேண்டும்.
உதாரணமாக, போர் குறித்து பேசும் போது குர்-ஆன் சற்று கடுமையாக 'எதிரிகளை பிடியுங்கள்,அவர்களை கொல்லுங்கள்!' என்ற தொனியில் பேசுகிறது. போர் சம்பந்தமான கட்டளைகளை அவ்வாறு தான் வழங்கவும் வேண்டும்.
ஆனால்,அது போர் பிண்ணனியில் பேசும் வசனம் என்பதை அறியாமல் அந்த வசனத்தை அணுகும் ஒருவர், இஸ்லாம் ஒரு கடும்போக்கு மதம் என்ற தப்பான அபிப்பிராயத்துக்கு உள்ளாவார்.
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
TNTJ செய்தது தவறு என்றாலும், அந்த தவறை மிகைப்படுத்தும் வகையில், அந்த காணொளியை தொகுத்தவர், பல நபிமொழிகளை பிழையான முறையில் விளக்கம் கொடுத்து, பெண்கள் வீட்டை விட்டு வெளி வருவதே பாவம் என்ற ரீதியில் காட்டி இருக்கிறார். TNTJ மீது குறை சுமத்துவது மட்டுமே அவரின் நோக்கமாக இருக்க கூடும். எனவே அவர் செய்ததும் தவறாகும்.
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு சந்தர்ப்பத்தில் தவறாக நடந்து கொண்ட TNTJ, அதை இன்னும் தவறாக சித்தரிக்க முனைந்த ஒரு காணொளி தொகுப்பாளர்.... இவர்கள் இருவரையும் மட்டும் வைத்துக் கொண்டு, கேவலம் ஒரு யூ-டியூப் காணொளியை ஆதாரமாக வைத்துக் கொண்டு, இஸ்லாத்தைப் பற்றி சரிவர அறியாத (மேற்குறித்த உங்கள் லாகிக் இல்லாத வாதம், நீங்கள் அறியாதவர் என்பதற்கு போதுமான ஆதாரமாகும் ) தமிழச்சி, இஸ்லாத்தின் மீது குறை சாற்றுவது மாபெரும் தவறாகும்.
இது குறித்து தமிழச்சியிடம் தெளிவான பதிலை எதிர்பார்க்கிறேன்.
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
No comments:
Post a Comment